பாலியல் குற்றவாளிகளுக்கு இந்த மாதிரி தண்டனை வழங்க வேண்டும் : வரலட்சுமி | கமலின் 'விக்ரம்' பட வசூலை முறியடிக்குமா 'தக்லைப்'? | சூரி உடன் நடித்தது பெருமை : ஐஸ்வர்யா லட்சுமி | நினைத்து கூட பார்க்கவில்லை : அதிதி ஷங்கர் | ரெட்ரோ' வில் காட்சிகள் நீக்கம் : பாலிவுட் நடிகர் வருத்தம் | 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவான நவீன் சந்திரா | இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் | நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் | பிளாஷ்பேக் : மருங்காபுரி சிவபாக்கியத்தின் நூற்றாண்டு |
எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்று வருகிறார் மாரிமுத்து. திரைப்படங்களில் உதவி இயக்குநராக தனது பயணத்தை ஆரம்பித்த மாரிமுத்து தமிழில் பல ஹிட் படங்களில் பணிபுரிந்துள்ளார். வாலி படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த மாரிமுத்து அந்த படம் குறித்த சுவாரசியமான தகவலை அண்மையில் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
வாலி படத்தின் கதைப்படி ஹீரோயின் சிம்ரனுக்கு அண்ணன் அஜித் யார், தம்பி அஜித் யார் என்ற குழப்பம் இருக்கும். படத்தில் இதற்காக சில திரில்லிங்கான காட்சிகள் வைக்கப்பட்டது. அந்த வகையில் ஒரு காட்சியில் தொப்பியுடன் முகத்தை மறைத்து வரும் அஜித் மீசையை எடுத்திருப்பார். இருந்தாலும் அண்ணனா, தம்பியா என்ற பயத்தில் சிம்ரன் இருப்பார். அதன்பிறகு மனைவியின் குழப்பத்தை தீர்ப்பதற்காக தம்பி அஜித் மீசை எடுத்துக்கொண்டதாக விளக்கம் கூறுவார். சிம்ரனுக்கு பயம் போகும். இதை அண்ணன் அஜித்திடம் சொல்ல போகும் போது அண்ணனும் மீசை எடுத்திருப்பது போல் ஒரு காட்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், அஜித் இந்த காட்சியை கடைசியில் எடுக்கலாம் என்று சொல்லிவிட்டார். அதன்பிறகு அவர் மற்றொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானதால் மீசையை எடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார். எனவே, அந்த காட்சி படமாக்கப்படவில்லை. இந்த காட்சி மட்டும் படத்தில் இருந்திருந்தால் பார்ப்பவர்கள் நிச்சயமாக அதிர்ந்திருப்பார்கள் என்று அந்த பேட்டியில் மாரிமுத்து கூறியுள்ளார்.