தமிழ் ரசிகர்களை நம்பினேன் : 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா | 'விஜ்ஜ்ஜஜஜு…….' யார் தெரியுமா ? | மீண்டும் இணைந்த களவாணி கூட்டணி | லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் சூரி : இயக்குனர் யார்? | குபேரா படத்தின் 8 நாள் வசூல் என்ன | இலியானாவுக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது | 35 லட்சம் பேக் : கயாடு பதில் சொல்வாரா | விஷ்ணு விஷால் குடும்ப கதையை சினிமாவாக எடுக்கலாம் போல | விஜய்சேதுபதி மகன் படவிழாவில் விஜய்யின் ஜனநாயகன் இயக்குனர் | ராஷ்மிகாவின் 'ரெயின்போ' படம் என்ன ஆயிற்று ? |
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும், பெப்சி அமைப்புக்கும் மோதல் போக்கு தீவிரம் அடைந்துள்ள நிலையில் 'தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு' என்ற புதிய அமைப்பைத் தயாரிப்பாளர் சங்கம் தொடங்கி இருக்கிறது. இதன் தொடக்க விழா நாளை நடப்பதாகவும் முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்திருப்பதாகவும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள 'பெப்சி' நாளை (14-ம் தேதி) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தமும், கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப் போவதாக அறிவித்தது.
இந்த நிலையில் திட்டமிட்டபடி நாளை படப்பிடிப்புகள் நடக்கும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பை நாங்கள் ஆரம்பிப்பது, தயாரிப்பாளர்களை, குறிப்பாக சிறு படத் தயாரிப்பாளர்களைக் காப்பாற்றுவதற்காகத்தான். 14ம் தேதி வேலை நிறுத்தம் என்று பெப்சி அறிவித்துள்ளது. அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.
நாங்கள் பெப்சி தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க வேண்டாம் என்று யாரிடமும் சொல்லவில்லை. அன்று எங்கள் அமைப்பு படப்பிடிப்பை நடத்தும். தயாரிப்பாளர்கள், புதிதாக நாங்கள் தொடங்கி இருக்கிற, தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு தொழிலாளர்களைப் பயன்படுத்தி ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள படப்பிடிப்புகளை நடத்துவார்கள் ” என்றார்.