தமிழ் ரசிகர்களை நம்பினேன் : 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா | 'விஜ்ஜ்ஜஜஜு…….' யார் தெரியுமா ? | மீண்டும் இணைந்த களவாணி கூட்டணி | லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் சூரி : இயக்குனர் யார்? | குபேரா படத்தின் 8 நாள் வசூல் என்ன | இலியானாவுக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது | 35 லட்சம் பேக் : கயாடு பதில் சொல்வாரா | விஷ்ணு விஷால் குடும்ப கதையை சினிமாவாக எடுக்கலாம் போல | விஜய்சேதுபதி மகன் படவிழாவில் விஜய்யின் ஜனநாயகன் இயக்குனர் | ராஷ்மிகாவின் 'ரெயின்போ' படம் என்ன ஆயிற்று ? |
ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் 'அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது' என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். அதன் பிறகு 'கோலி சோடா' படத்தை இயக்கினார். இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. அதன் பிறகு 10 எண்றதுக்குள்ள, கடுகு, கோலிசோடா 2, மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கினார். இந்த படங்கள் பெரிய வரவேற்பு பெறவில்லை.
இந்த நிலையில் விஜய் மில்டன் இயக்கும் தமிழ், தெலுங்கு இருமொழிப் படத்தில் தெலுங்கு நடிகர் ராஜ் தருண் நாயகனாக நடிக்கிறார். ரப் நோட் புரொடக்ஷன் தயாரிக்கிறது. தற்காலிகமாக படத்தின் தலைப்பாக "புரொடக்ஷன் நம்பர் 5" என வைக்கப்பட்டுள்ளது.
படம் குறித்து விஜய் மில்டன் கூறுகையில் “இது எனக்கு மிக மிக நெருக்கமான ஒரு படம். கோலி சோடா பாணியை தொடர்ந்து இது ஒரு சக்திவாய்ந்த, உணர்ச்சிமிக்க, உண்மையான கதையை கொண்டு வருகிறது . ராஜ் தருண் மிகவும் புத்துணர்ச்சியுடனும், இளமையாகவும் தோன்றுகிறார். தமிழ் ரசிகர்களை அவருடைய நடிப்பு ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என எனக்கு நம்பிக்கை உள்ளது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்" என்றார்.