ரத்தம் தெறிக்கும் டிசி படத்தின் டிரைலர் | கருப்பு படத்தில் முதல்வர் விஜய்க்கு நன்றி கார்டு | பூஜா ஹெக்டேவின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் படம் | முதல் நாளே 10 கோடி வசூலை தாண்டிய ‛அதிரடி' திரைப்படம் | துரந்தர் 2 : ஓயே ஓயே பாடலுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு | முதல்வர் விஜயை சந்தித்து கமல் வைத்த 6 கோரிக்கை | இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர் | சம்பளம் பற்றி வெளிப்படையாகச் சொன்ன சனம் ஷெட்டி | கருப்பு : முதல் நாள் வசூல் எவ்வளவு ? | துரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு வாரம் தள்ளி வைப்பு |

தமிழ் சினிமாவின் 1940களில் குணச்சித்திரம் மற்றும் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் மருங்காபுரி செல்லம்மாள் சிவபாக்கியம் என்ற எம்.எஸ்.எஸ்.பாக்கியம். திருச்சி அருகே உள்ள மருங்காபுரி ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர். நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட சிவபாக்கியம் குடும்ப எதிர்ப்புகளை மீறி நாடகங்களில் நடித்து வந்தார்.
பின்னர், ஜூபிடர் பிலிம்ஸில் மாத சம்பள நடிகையாக சேர்ந்து சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். அவர் குறிப்பிடும்படியான பெரிய கேரக்டரில் நடித்த படம் 'வித்யாபதி'. 1946ம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தின் நாயகன் டி.ஆர்.ராமச்சந்திரன், நாயகி தவமணி தேவி, எம்.என்.நம்பியார் ஜோடியாக பாக்கியம் நடித்தார்.
அதைத்தொடர்ந்து ராஜகுமாரி, கஞ்சன், மோகினி, வேலைக்காரி, கன்னியின் காதலி, மர்மயோகி உள்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். மர்மயோகியின் ஹிந்தி ரீமேக்கிலும் நடித்தார். திரைப்படங்கள், நாடகங்கள் நடித்த காலத்திலும் வானொலி நாடகங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
நேற்றுடன் சிவபாக்கியத்தின் 99 வயது நிறைவடைந்து அவரது நூற்றாண்டு தொடங்குகிறது. அவரை போற்றுவோம் நினைவு கூறுவோம்.