அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் : பிஸியாகும் நேரு ஸ்டேடியம் | கதை தயாராகாமல் அறிவிக்கப்பட்டதா விக்ரம் 64 ? | சென்ற வருடம் 'மஞ்சும்மேல் பாய்ஸ்', இந்த வருடம் 'லோகா' | சமூக ஊடகத்தில் கமெண்ட் என்ற பெயரில் மனநோயாளிகள் தாக்குகிறார்கள் : தங்கர்பச்சான் | '96' பிரேம்குமார் இயக்கத்தில் பஹத் பாசில் | ஜப்பானில் வெளியான 'வேட்டையன்' | கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல் | ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா? | விபத்தில் சிக்கியதாக பரவிய வதந்தி: விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால் | அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது: ஐஸ்வர்யா ராய் வழக்கு |
லிங்குசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த எந்த திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் சூர்யா, கார்த்தி, சிம்பு என பல முன்னணி நடிகர்களிடம் கதை சொல்லி இருக்கிறாராம் லிங்குசாமி. சமீபத்தில் நடிகர் ஆர்யாவுக்கு பையா படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை கூறியுள்ளார் லிங்குசாமி. ஆர்யா தான் தற்போது காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்தவுடன் பையா 2 படப்பிடிப்பு தொடங்கலாம் என லிங்குசாமி தரப்பில் சொல்லப்படுகிறது. இதனிடையே இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க தற்போது பூஜா ஹெக்டே உடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த படத்தில் நாயகியாக ஜான்வி கபூர் நடிப்பதாக தகவல் வந்தது. ஆனால் அதை போனி கபூர் மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.