தக் லைப் குறித்த கேள்விக்கு கலகலப்பாக பதிலளித்த கமல்ஹாசன் | புஷ்பா 2வில் பெண் வேடத்தில் நடிக்க பயந்த அல்லு அர்ஜுன் | ஜெயம் ரவியை தொடர்ந்து பெயரை மாற்றிய கவுதம் கார்த்திக் | கும்பமேளாவில் வெளியிடப்பட்ட தமன்னாவின் ஓடேலா 2 டீசர் | நாதஸ்வரம் சீரியல் நடிகை ஸ்ரித்திகா வளைகாப்பு : வாழ்த்திய பிரபலங்கள் | மணிரத்னம் இயக்கத்தில் நவீன் பொலிஷெட்டி | கமல் சார் படங்களை 30, 40 முறைக்கு மேல பார்த்திருக்கேன் - த்ரிஷா | ராம் கோபால் வர்மாவின் 'சாரி' : 28ம் தேதி வெளியாகிறது | தமிழ் படங்களில் நடிக்க தமிழ் கற்று வரும் கன்னட நடிகை | அரசுகள் தொழில்நுட்ப வளர்ச்சியை கட்டுப்படுத்த கூடாது : கமல்ஹாசன் கோரிக்கை |
2005ம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் சண்டக்கோழி. லிங்குசாமிக்கு இந்த படம் தான் விஷாலை ஆக்ஷன் ஹீரோவாக அறிமுகப்படுத்தியது. மீரா ஜாஸ்மின் ஹீரோயின் ஆக நடித்திருந்தார் ராஜ்கிரண் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் இந்த படத்தில் விஜய் நடிக்க விரும்பியதாகவும் அதனை அவர் மறுத்துவிட்டார் என்றும் தற்போது லிங்குசாமி கூறியிருக்கிறார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது :
சண்டக்கோழி கதை தயாரானதும் விஜயிடம் சென்று கதை சொன்னேன் பாதி கதை கேட்டவர் மீதி கவிதை கேட்க மறுத்தார். காரணம் மீதி கதையில்தான் ராஜ்கிரன் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கிறது. ராஜ்கிரண் படத்துக்குள் வந்த பிறகு எனக்கு என்ன வேலை இருக்கிறது என்று விஜய் கூறிவிட்டார். அடுத்து சூர்யாவிடம் கதை சொன்னேன் அவரும் நடிக்க மறுத்து விட்டார். அதன் பிறகு தான் விஷாலை நடிக்க வைத்தேன்.
சண்டக்கோழி படத்தின் வெற்றிக்கு பிறகு ஒரு முறை விஜய் சந்தித்தேன். அப்போது அவரிடம் படத்தின் இரண்டாம் பகுதி கதையின் கேட்கவே இல்லையே என்றேன். "அந்தப் பையன்(விஷால்) இந்த துறைக்கு வர வேண்டும் என்று இருக்கிறது. அவருக்கு பொருத்தமான கதை இது. கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் பிரமாதமாக நடித்திருக்கிறார் என்று சொன்னார். விஷால் பிரபாஸ் இடத்திற்கு வந்திருக்க வேண்டியது. எங்கோ மிஸ் ஆகி இருக்கிறது ஆனாலும் விரைவில் அவர் அந்த இடத்திற்கு வருவார்.
இவ்வாறு லிங்குசாமி கூறியிருக்கிறார்.