ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' | பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி |

தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த வாத்தி திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பு பெற்று திரையரங்குகளில் வெற்றி நடைபோடுகிறது. தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க முக்கிய வேடங்களில் சந்தீப் கிஷான், சிவராஜ் குமார் , நிவேதா சதிஷ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். இந்நிலையில் உறியடி படத்தின் மூலம் பிரபலமான நடிகரும், இயக்குனருமான விஜய் குமார், கேப்டன் மில்லர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது . இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




