போதையில் நடிகர் கார் மோதி வாலிபர் உயிரிழப்பு | காதலியை கரம்பிடிக்கும் நரேஷ் | நீண்ட இடைவேளைக்குப் பின் சின்னத்திரையில் மீண்டும் களமிறங்கும் சாதனா | சுரேஷ்கோபி படம் மூலம் மீண்டும் மலையாளத்திற்கு திரும்பிய அனுபமா பரமேஸ்வரன் | நேஹா சக்சேனாவும் பரபரப்பு வளையத்தில் சிக்குவாரா? | இறுதிக்கட்டத்தை எட்டிய அர்ஜுன் - நிக்கி கல்ராணியின் மலையாள படம் | 35 வருடங்களுக்குப் பிறகு வைரலான மோகன்லால் - மம்முட்டி தம்பதி | ஆதிபுருஷ் படத்திற்காக 10 ஆயிரம் டிக்கெட்டுகளை கொடுக்கும் ரன்பீர் கபூர்! | லியோ படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் டென்சில் ஸ்மித் | சாண்டி படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா |
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாரூக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் வெளிவந்த ஹிந்திப் படம் 'பதான்'. இப்படம் தற்போது 1000 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதல் கட்ட வெளியீட்டிலேயே உலக அளவில் 1000 கோடி வசூலைக் கடந்த முதல் ஹிந்தித் திரைப்படம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்தியாவில் மொத்த வசூலாக 623 கோடி, நிகர வசூலாக 516 கோடி, வெளிநாடுகளில் மொத்த வசூலாக 377 கோடியை வசூலித்துள்ளது 'பதான்'.
இதற்கு முன்பு 1000 கோடி வசூலித்த படங்களாக 'பாகுபலி 2, கேஜிஎப் 2, ஆர்ஆர்ஆர், டங்கல்' ஆகிய படங்கள் இருக்கின்றன. அவற்றில் டங்கல் மட்டுமே ஹிந்திப் படம், மற்ற மூன்று படங்களும் தென்னிந்திய மொழிப் படங்கள். சீனா வெளியீடு இல்லாமலேயே 'பதான்' படம் 1000 கோடி வசூலைப் பெற்றுள்ளது.
'டங்கல்' படம் இந்தியாவில் வெளியான ஆறு மாதங்களுக்குப் பிறகு சீனாவில் வெளியாகி அங்கு மட்டுமே 1300 கோடி வசூலைப் பெற்றது. முதல் கட்ட வெளியீட்டில் அப்படம் மொத்தமாக 700 கோடி மட்டுமே வசூலித்தது. அதனுடன் ஒப்பிட்டுத்தான் 'பதான்' படத்தின் வசூலை முதல் கட்ட வெளியீட்டிலேயே 1000 கோடி வசூல் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.