''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட் திரைப்படங்களில் வில்லனாக நடித்து வந்தாலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பரவிய காலகட்டங்களில் தன்னால் முடிந்த அளவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெவ்வேறு விதமாக உதவிகள் செய்தார். இது அவரை நிஜத்தில் ரியல் ஹீரோவாக மக்கள் பாராட்டும் அளவிற்கு, அவருக்கு கோவில் கட்டும் அளவிற்கு மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு சென்று வைத்தது.
இந்த நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பல கிளைகளைக் கொண்ட மிகப்பெரிய ரெஸ்டாரன்ட் ஒன்று தாங்கள் விசேஷமாக தயாரிக்கும் உணவை பரிமாறும் தட்டுக்கு சோனு சூட் பெயரை சூட்டி தங்களது அன்பை வெளிப்படுத்தி உள்ளது.
'மந்தி தளி' எனப்படும் ஒரே நேரத்தில் 20 பேர் சாப்பிடக்கூடிய அசைவ உணவை தயாரித்து அதனை ஒரு பிரம்மாண்ட தட்டில் வாடிக்கையாளர்களுக்கு தருகின்றனர். குறிப்பாக குடும்பத்துடன் வருபவர்களும் நண்பர்கள் குழுவாக வருபவர்களும் இந்த மந்தி தளி உணவை அதிகம் விரும்பி தேர்வு செய்கின்றனர். இதற்குத்தான் சோனு சூட்டின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இப்படி தன் பெயரில் ஒரு உணவு பரிமாறும் தட்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பதை கேள்விப்பட்டு அந்த ரெஸ்டாரன்ட் கிளை ஒன்றுக்கு நேரில் சென்று பார்த்து தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார் சோனு சூட்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “ மிகச்சிறிய அளவில் அதுவும் சைவ உணவு சாப்பிடும் என் பெயரில் 20 பேர் வரை சாப்பிடும் வகையிலான உணவை பரிமாறும் இந்தியாவின் மிகப்பெரிய தட்டுக்கு என் பெயர் சூட்டியுள்ளனர்.. அன்பும் பணிவும்..” என்று குறிப்பிட்டுள்ளார்.