இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாரூக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் வெளிவந்த ஹிந்திப் படம் 'பதான்'. இப்படம் தற்போது 1000 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதல் கட்ட வெளியீட்டிலேயே உலக அளவில் 1000 கோடி வசூலைக் கடந்த முதல் ஹிந்தித் திரைப்படம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்தியாவில் மொத்த வசூலாக 623 கோடி, நிகர வசூலாக 516 கோடி, வெளிநாடுகளில் மொத்த வசூலாக 377 கோடியை வசூலித்துள்ளது 'பதான்'.
இதற்கு முன்பு 1000 கோடி வசூலித்த படங்களாக 'பாகுபலி 2, கேஜிஎப் 2, ஆர்ஆர்ஆர், டங்கல்' ஆகிய படங்கள் இருக்கின்றன. அவற்றில் டங்கல் மட்டுமே ஹிந்திப் படம், மற்ற மூன்று படங்களும் தென்னிந்திய மொழிப் படங்கள். சீனா வெளியீடு இல்லாமலேயே 'பதான்' படம் 1000 கோடி வசூலைப் பெற்றுள்ளது.
'டங்கல்' படம் இந்தியாவில் வெளியான ஆறு மாதங்களுக்குப் பிறகு சீனாவில் வெளியாகி அங்கு மட்டுமே 1300 கோடி வசூலைப் பெற்றது. முதல் கட்ட வெளியீட்டில் அப்படம் மொத்தமாக 700 கோடி மட்டுமே வசூலித்தது. அதனுடன் ஒப்பிட்டுத்தான் 'பதான்' படத்தின் வசூலை முதல் கட்ட வெளியீட்டிலேயே 1000 கோடி வசூல் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.