கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
சமீபகாலமாக பிரபலங்களுடன் எப்படியாவது இணைந்து புகைப்படம் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். சிலர் தாங்களே சம்பந்தப்பட்ட பிரபலங்களுடன் நின்று செல்பி எடுத்துக்கொள்ளவும் விரும்புகிறார்கள். பல நேரங்களில் பிரபலங்களின் அனுமதி இல்லாமல் அவர்களுடன் செல்பி எடுக்க முயற்சிக்கும்போது அங்கே விரும்பத்தகாத நிகழ்வுகள் நடப்பதும் உண்டு.
அப்படி சமீபத்தில் பிரபல பாலிவுட் பாடகரான சோனு நிகம் என்பவர் மும்பை செம்பூரில் நடைபெற்ற இசை கச்சேரி ஒன்றை முடித்துவிட்டு கிளம்பும்போது சிவசேனா கட்சியை சேர்ந்த எம்எல்ஏ பிரகாஷ் படேர்பேக்கர் என்பவரின் மகனான ஸ்வப்னில் படேர்பேக்கர் என்பவர் அவருடன் இணைந்து வலுக்கட்டாயமாக செல்பி எடுத்துக் கொள்ள முயன்றார். ஆனால் அதை அனுமதிக்க சோனு நிகம் மறுத்தபோது ஏற்பட்டு தள்ளுமுள்ளுவில் அவரையும் அவரது பாதுகாவலர்களையும் ஸ்வப்னில் படேர்பேக்கர் தள்ளியதில் பாதுகாவலர் ஒருவர் காயமடைந்தார்,
இதைத்தொடர்ந்து போலீசில் அளிக்கப்பட்ட புகாரில் ஸ்வப்னில் கைது செய்யப்பட்டார். இந்த நிகழ்வு தொடர்பாக அவரது தந்தை எம்எல்ஏ பிரகாஷ் கூறும்போது, அப்படி ஒரு நிகழ்வு நடந்திருந்தால் அது வருந்தத்தக்கது.. ஆனால் என் மகன் எந்த உள்நோக்கத்திலும் அப்படி செய்திருக்க மாட்டார் என்று கூறியுள்ளார்.
அதேசமயம் சோனு நிகம் தரப்பிலிருந்து தாங்கள் எந்த ஒரு புகாரையும் எம்எல்ஏ மகன் மீது அளிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. சோனு நிகம் தமிழில் ஜீன்ஸ், பார்த்தேன் ரசித்தேன், கிரீடம், சகுனி உள்ளிட்ட பல படங்களில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.