துருவ் நடிக்கும் உண்மைக் கதை : மணத்தி கணேசன் யார் தெரியுமா? | பிளாஷ்பேக்: 'இசைப் பேரரசி' எம் எஸ் சுப்புலக்ஷ்மியின் கலைச் சேவைக்கு வித்திட்ட “ஸேவாஸதனம்” | நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்பிய வீர தீர சூரன் வில்லன் நடிகர் | 12 நாட்கள் குளிக்காமல் படப்பிடிப்பிற்கு சென்றேன் : உண்மையை உடைத்த அமீர்கான் | தொடர் வெற்றி : அடுத்தடுத்து வெளியாகும் சசிகுமார் படங்கள் | கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு | பாகிஸ்தான் சார்ந்த ஓடிடி 'கன்டென்ட்' - தடை விதித்த மத்திய அரசு | சிம்ரனை தொடர்ந்து இலங்கை தமிழ் பேசும் தேவயானி |
கடந்தாண்டு கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து வெளியான காந்தாரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் அந்த படம் வெளியான சில நாட்களிலேயே படத்தில் இடம்பெற்ற வராஹரூபம் என்கிற பாடல் ஏற்கனவே மலையாளத்தில் பிரபலமாக விளங்கும் தாய்க்குடம் பிரிட்ஜ் என்கிற இசைக்குழு உருவாக்கிய நவரசம் என்கிற பாடலின் காப்பியாக உருவாகி இருந்தது என்கிற சர்ச்சை கிளம்பியது. அதை காந்தாரா பட இசையமைப்பாளர் அஜ்னீஷ் லோக்நாத் மறுத்தார்.
இதைத் தொடர்ந்து தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழு காப்பிரைட் உரிமை மீறல் என்கிற அடிப்படையில் காந்தாரா பட இயக்குனர் ரிஷப் ஷெட்டி மற்றும் பட தயாரிப்பாளர் மீது வழக்கு தொடர்ந்தது. சில தினங்களுக்கு முன்பு கூட இந்த வழக்கு தொடர்பாக இவர்கள் இருவருமே கோழிக்கோடு காவல் நிலையத்தில் போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜராகி தங்களது விளக்கத்தை அளித்தனர். இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த பிரபல செய்தி நிறுவனம் ஒன்று, இந்த வழக்கில் இந்த படத்தை கேரளாவில் வெளியிட்ட நடிகர் பிரித்விராஜையும் தொடர்புபடுத்தி காவல் துறையில் புகார் அளித்ததன் பேரில் பிரித்விராஜ் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
ஆனால் இந்த எப்ஐஆர்-ஐ தள்ளுபடி செய்ய வேண்டும் என பிரித்விராஜ் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் பிரித்விராஜ் மீது தொடரப்பட்ட எப்ஐஆர- ஐ தள்ளுபடி செய்தது. மேலும் இதுபற்றி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் பிரித்விராஜை பொறுத்தவரை அவர் காந்தாரா படத்தை கேரளாவில் வெளியிட்ட ஒரு விநியோகஸ்தர் மட்டுமே.. அவருக்கும் இந்த காப்பிரைட் பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரை தேவையில்லாமல் இந்த வழக்கிற்குள் இழுத்துள்ளது நன்றாகவே தெரிகிறது. இது வழக்கை நீண்ட நாட்களுக்கு இழுத்துக்கொண்டே தான் செல்லும் என்று வழக்கு தொடர்ந்தவர்களுக்கு எனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.