சமந்தாவின் அபத்தமான, பயனற்ற செலவு என்ன தெரியுமா? | எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான் - காதலை உறுதி செய்த ராஷ்மிகா | கேம் சேஞ்சர் படத்திற்காக 15 கோடியில் படமாக்கப்பட்ட பிரம்மாண்ட பாடல் | பணி படம் பார்த்துவிட்டு ஜோஜூ ஜார்ஜை பாராட்டிய கமல் | 'விசில் போடு' சாதனையை முறியடிக்குமா 'கிஸ்ஸிக்'? | தமிழ் சினிமாவின் 1000 கோடி கனவு…அடுத்த ஆண்டாவது நடக்குமா? | 4வது திருமணத்திற்கு பின் கொச்சியை விட்டு வைக்கம் இடம் பெயர்ந்த நடிகர் பாலா | எம்புரான் செட்டுக்கு விசிட் அடித்த ராம்கோபால் வர்மா | நவம்பர் 29ல் 9 படங்கள் ரிலீஸ் | கோவாவில் தெருவோர கடைக்காரரிடம் சண்டை போட்ட ‛ஜெயிலர்' வில்லன் |
மலையாள திரையுலகில் கடந்த பல வருடங்களாக நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகர் இந்திரன்ஸ். கடந்த சில வருடங்களாகவே நகைச்சுவையிலிருந்து குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கு மாறிய இவர் சில படங்களில் கதையின் நாயகனாகவும் கூட நடித்து வருகிறார். முன்பை விட சமீபகாலமாகவே இவருக்கு மலையாள திரை உலகில் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இவர் பேசும்போது, சில வருடங்களுக்கு முன்பு நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்ட வழக்கில், தனது சக நடிகர் ஒருவர் (திலீப்) ஈடுபட்டிருந்தார் என்று சொல்லப்படுவதையே தன்னால் நம்ப முடியவில்லை என்று கூறியிருந்தார். அது மட்டுமல்ல இந்த விஷயத்தில் ஆதரவாக குரல் கொடுக்க வேண்டியது சம்பந்தப்பட்ட நடிகைக்கு தானே தவிர, அதற்காக துவங்கப்பட்டதாக சொல்லப்படும் சினிமா பெண்கள் நல அமைப்பிற்காக அல்ல என்றும் அந்த பேட்டியில் அவர் கூறியதாக சொல்லப்படுகிறது.
2017ல் பிரபல மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்ட நிகழ்வை தொடர்ந்து, மலையாள திரையுலகில் உள்ள சில நடிகைகள் ஒன்றிணைந்து சினிமா பெண்கள் நல அமைப்பு ஒன்றை உருவாக்கி திரையுலகில் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட நடிகை வழக்கில் கூட குற்றவாளியாக கருதப்பட்டு சிறை சென்று வந்த நடிகர் திலீப் மீது தொடர்ந்து கருத்து தாக்குதல் நடத்தி வந்தனர். இந்த நிலையில் நடிகர் இந்திரன்ஸ் அப்படிப்பட்ட சினிமா பெண்கள் நல அமைப்பு குறித்து விமர்சனம் செய்யும் விதமாக கருத்து கூறியது மலையாள திரை உலகில் பரபரப்பை ஏற்றிய ஏற்படுத்தியது.
தற்போது இதுகுறித்து நடிகர் இந்திரன்ஸ் விளக்கம் அளித்துள்ளதுடன், தான் பத்திரிக்கையில் கூறிய செய்திகள் வேறு மாதிரி வெளிப்பட்டு நான் தவறாக கூறியது போன்று ஒரு தோற்றம் உருவாகிவிட்டது. நான் யாரையும் நோக்கி எனது விரல்களை சுட்டிக்காட்டவில்லை. அதுமட்டுமல்ல சினிமா பெண்கள் அமைப்பு பற்றி நான் எதுவும் தவறாகவும் கூறவில்லை. சிலர் இந்த பேட்டியில் நான் சொல்லாதவற்றை சொன்னது போன்று செய்திகளை பரப்புவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்படி சினிமா பெண்கள் நல அமைப்பு மீது நான் தவறாக கூறியதாக யாரேனும் நினைத்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார் நடிகர் இந்திரன்ஸ்.