பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
தெலுங்கு திரையுலகில் புதியவர்களின் பங்களிப்பில் நல்ல படைப்புகள் வெளியாகும்போது அதுகுறித்து தனது மனம் திறந்த விமர்சனத்தையும் பாராட்டையும் வெளிப்படுத்த தயங்காதவர் நடிகர் மகேஷ்பாபு. இதன் மூலம் பல படங்கள் ரசிகர்களை எளிதாக சென்றடைந்து வெற்றியும் பெற்றுள்ளன. இந்த நிலையில் தற்போது ரைட்டர் பத்மபூஷன் என்கிற படத்தை சமீபத்தில் பார்த்த மகேஷ்பாபு. அந்தப்படம் குறித்து வியந்து தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளதுடன் கட்டாயம் அனைவரும் பார்க்க வேண்டிய படம் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “ரைட்டர் பத்மபூஷன் படத்தை மிகவும் என்ஜாய் செய்து பார்த்தேன். மனதைத் தொடும் ஒரு படம். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி அருமை. குடும்பத்துடன் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு படம். நடிகர் சுகாஷின் நடிப்பு என்னை கவர்ந்தது. இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார் மகேஷ்பாபு.
அறிமுக இயக்குனர் சண்முக பிரசாந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் சுகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக டீனா ஷில்பாராஜ் மற்றும் ரோகிணி, ஆசிஸ் வித்யார்த்தி உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். பத்மபூஷன் என்கிற இளம் எழுத்தாளரை பற்றி நகரம் விதமாக இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது.