மணிரத்னம் இயக்கத்தில் நவீன் பொலிஷெட்டி | கமல் சார் படங்களை 30, 40 முறைக்கு மேல பார்த்திருக்கேன் - த்ரிஷா | ராம் கோபால் வர்மாவின் 'சாரி' : 28ம் தேதி வெளியாகிறது | தமிழ் படங்களில் நடிக்க தமிழ் கற்று வரும் கன்னட நடிகை | அரசுகள் தொழில்நுட்ப வளர்ச்சியை கட்டுப்படுத்த கூடாது : கமல்ஹாசன் கோரிக்கை | பிளாஷ்பேக் : எம்ஜிஆர் விழா நடத்தி விருது கொடுத்த இயக்குனர் | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோ | நடிகை வைபவி சாண்டில்யா திருமணம் | 'டிராகன், நி.எ.மே.எ.கோபம்' : முதல் நாள் வசூல் | பிரபுதேவா நிகழ்ச்சி : வருத்தத்துடன் விலகுவதாக சிருஷ்டி டாங்கே அறிவிப்பு |
மலையாள நடிகை பார்வதி ஒரு பக்கம் சினிமாவில் நடிப்புக்கு தீனி போடும் கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் தான் சார்ந்து இருக்கும் மலையாள சினிமாவில் பெண்களின் பிரச்னைக்கு குரல் கொடுக்கும் விதமாக தாங்கள் ஆரம்பித்த சினிமா பெண்கள் நல அமைப்பு (WCC) மூலமாக தொடர்ந்து சினிமாவில் பெண்கள் படும் கஷ்டங்களை பற்றி பேசி சில விஷயங்களில் தீர்வும் கண்டு வருகிறார்.
இந்த சினிமா பெண்கள் நல அமைப்பு துவங்கப்பட்டதே கடந்த 2017ல் நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக சித்தரவதைக்கு ஆளான சம்பவத்தை தொடர்ந்து தான். அந்த சமயத்தில் பார்வதியுடன் நடிகைகள் ரேவதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், மஞ்சு வாரியர், விது வின்சென்ட் ஆகியோர் இந்த அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டனர். ஆனால் இதில் மஞ்சு வாரியர், விது வின்சென்ட் போன்ற ஒரு சிலர் நாளடைவில் இந்த சினிமா பெண்கள் நல அமைப்பிலிருந்து விலகினார்கள்.
சமீபத்திய ஒரு பேட்டியில் பார்வதியிடம் மஞ்சு வாரியர், விது சந்திரா போன்றவர்கள் இந்த அமைப்பில் இருந்து விலகியது எதனால் என்று ஒரு கேள்வி முன் வைக்கப்பட்டது. இதனால் கோபமான பார்வதி, “ஏன் விலகினார்கள் என்று நீங்கள் அவர்களிடம் தான் போய் கேட்க வேண்டும்.. சம்பந்தமே இல்லாத என்னிடம் இந்த கேள்வியை நீங்கள் கேட்பதே தவறு. ஏன் உங்களுக்கு அவர்களிடம் பேட்டி எடுக்க முடியாதா என்ன? அதை விட்டுவிட்டு யார் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களிடம் வந்து இப்படி நீங்கள் செய்வது எங்களை ரொம்பவே மரியாதை குறைவாக நடத்துவது போல இருக்கிறது” என்று பொங்கி தள்ளிவிட்டார்.