'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சமீபகாலமாக தமிழ் திரையுலகில் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற படங்கள் டிஜிட்டலில் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் செய்யப்படுவது அவ்வப்போது நடந்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட, ரஜினிகாந்த் நடிப்பில் 20 வருடங்களுக்கு முன்பு வெளியான பாபா திரைப்படம் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு மறு வெளியீடு செய்யப்பட்டது. இதில் சில காட்சிகள் வெட்டப்பட்டும் படம் வெளியான சமயத்தில் சேர்க்கப்படாத சில காட்சிகள் இதில் இணைக்கப்பட்டும் வெளியானது. அதேபோல கமல் நடிப்பில் வெளியாகி தோல்வியை தழுவிய ஆளவந்தான் படம் கூட சமீபத்தில் இதேபோன்று டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு புதுவிதமாக படத்தொகுப்பு செய்யப்பட்டிருக்கிறது. விரைவில் படம் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் மலையாள திரையுலகில் மோகன்லாலின் எவர்கிரீன் படங்களில் ஒன்றான ஸ்படிகம் திரைப்படமும் இதேபோன்று டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு வரும் பிப்ரவரி ஒன்பதாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. படம் வெளியானபோது இந்த படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு இருந்ததோ, தற்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் எட்டரை (8.30) நிமிடங்கள் இந்த படத்தின் நீளம் அதிகரித்துள்ளது.
இது குறித்து இந்த படத்தின் இயக்குனர் பத்ரன் கூறும்போது, ஏற்கனவே படத்தில் உள்ள காட்சிகள் எதையும் நீக்கவில்லை. அதேசமயம் ஸ்படிகம் படத்திற்காக எடுக்கப்பட்டு பயன்படுத்தாமல் வைத்திருந்த சில புதிய காட்சிகளை இதில் இணைத்துள்ளோம். ஏற்கனவே ஸ்படிகம் படம் பார்த்த ரசிகர்கள் அனைவருக்குமே இந்த புதிய காட்சிகள் வியப்பையும் உற்சாகத்தையும் தருவதாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.