சசிகுமார் - சரத்குமாரின் 'நா நா' டிச., 15ல் ரிலீஸ் | அதிர்ஷ்டசாலியாக மாறிய மாதவன் | 'அனிமல்' முதல் நாள் வசூல் ரூ.116 கோடி என அறிவிப்பு | விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு? | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'சலார்' டிரைலர் | மீனவர் கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் | காதலியை கரம்பிடித்த குருவி தமிழ்செல்வன் | ‛மெட்டி ஒலி' தனத்தை ஞாபகம் இருக்கா? | சீரியலுக்குள் என்ட்ரி கொடுத்த விஜய் பட நடிகர் | ‛பப்லு' பிரித்விராஜை பிரிந்துவிட்டாரா ஷீத்தல்? |
'சர்காரு வாரி பாட்டா' படத்திற்கு பிறகு இயக்குனர் த்ரி விக்ரம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நாக வம்சி தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கியது. கதையில் ஏற்பட்ட சில மாற்றங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதையடுத்து மீண்டும் தற்போது படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றது வருகிறது. இதில் மகேஷ் பாபு நடிக்கும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இரு கதாநாயகிகள் நடிக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஒரு கதாநாயகியாகவும், ஸ்ரீலீலா மற்றொரு கதாநாயகியாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.