ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா |
அஜித்தின் 62வது படத்தை இயக்கப் போவது யார் என்பது குறித்து கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட அந்தப் படம் எப்போது ஆரம்பமாகும் என்பது குறித்து இன்னும் தகவல் இல்லை.
இதனிடையே, அஜித்தின் 62வது படத்தின் இயக்குனர் மாற்றப்படலாம் என்றும், விக்னேஷ் சிவனுக்குப் பதிலாக வேறு ஒரு இயக்குனர் நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனிடையே, டுவிட்டரில் சற்று முன் “#JusticeforVigneshShivan” என சிலர் டிரெண்டிங் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். மேலும், விக்னேஷ் சிவனை அஜித் தன் படத்திலிருந்து நீக்கக் கூடாது என்றும் அவர்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.
எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவருதற்கு முன்பாக இப்படி டிரெண்டிங் வரை அஜித் 62 படம் பற்றி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.