'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
'துணிவு' படத்திற்குப் பிறகு அஜித் நடிக்கும் அவரது 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப் போவதாக கடந்த வருடமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் முதல் முறையாக நடிக்கும் இப்படத்திற்காக அவருக்கு முந்தைய சம்பளத்தை விட அதிகமான சம்பளம் பேசப்பட்டது என்றும் சொன்னார்கள்.
'துணிவு' படம் வந்து பெரும் வெற்றி பெற்ற பிறகு அஜித்தின் எண்ணத்தில் மாறுதல் ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அடுத்தும் ஆக்ஷன் படமாகக் கொடுப்பதுதான் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் என்று யோசிக்கிறாராம். விக்னேஷ் சிவன் இதற்கு முன்பு இயக்கிய படங்கள் நகைச்சுவை கலந்த ரொமான்டிக் படங்களாகத்தான் இருக்கும். அவர் ஆக்ஷன் படங்களை இயக்கியது கிடையாது.
எனவே, அதிரடியான ஆக்ஷன் படத்தை கொடுக்கக் கூடிய இயக்குனரின் படத்தில் நடிக்கலாம் என்பதுதான் அந்த முடிவாம். அஜித் 62க்கு வேறு ஒரு இயக்குனர், அதற்குப் பிறகு வேண்டுமானால் அஜித் 63க்கு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.
தற்போது அஜித், விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் லண்டனில் லைக்கா குழுமத் தலைவர் சுபாஷ்கரனுடன் பேசி வருகிறார்களாம். ஓரிரு நாட்களில் யார் யார் எந்தப் படம் என்பது குறித்து அறிவிப்பு வரலாம் என்பதுதான் லேட்டஸ்ட் தகவல்.