டிக்கெட் உயர்வை அனுமதிக்க மாட்டோம்: தெலுங்கானா தியேட்டர் சங்கம் | என்னை யாரும் கண்டுகிடலை.. நொறுங்கிய என் ஈகோ: பெங்களூருவில் ரஜினிகாந்த் பேச்சு | 6 மொழிகளில் தயாராகும் சிலந்தி 2ம் பாகம் | தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மோசடி: சிவகார்த்திகேயன் எச்சரிக்கை | தமிழில் மீண்டும் ஒரு ஜோம்பி படம் | ரவி மோகன் விருது விழாவில் கெனீஷாவின் இசை நிகழ்ச்சி | பிளாஷ்பேக்: குஷ்புவை நிராகரித்த பார்த்திபன் | பிளாஷ்பேக்: தணிக்கை குழுவால் சிதைக்கப்படட 'நல்ல தீர்ப்பு' | 2026 - வசூல், லாபத்தில் முதலிடத்தில் 'தாய் கிழவி' | ஜனநாயகன் : புது டைட்டில் கார்டு வேலைகள் ஆரம்பம்… |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்க உள்ள அவரது 67வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. 'வாரிசு' படம் வெளியான பிறகு அறிவிப்பு வரலாம் என்றார்கள். ஆனால், இன்னமும் வெளியாகவில்லை. பட அறிவிப்பு ஒரு வீடியோ முன்னோட்டத்துடன் வர உள்ளது என்பது மட்டும் உறுதி. அது விரைவில் வெளிவர வாய்ப்புள்ளது.
படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பே இன்னும் வெளியாகவில்லை. அதற்குள் படத்தின் தெலுங்கு வினியோக உரிமை விற்கப்பட்டுள்ளதாக டோலிவுட்டிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. பல வெற்றிகரமான தெலுங்குப் படங்களை வினியோகித்துள்ள ஸ்ரீ காயத்ரி தேவி பிலிம்ஸ் என்ற நிறுவனம் தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களுக்கான வினியோக உரிமையை வாங்கியுள்ளதாம். மேலும், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி படம் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்களாம்.
இப்போதே நாங்கள் பட வெளியீட்டைப் பற்றி தெரிவிக்கிறோம். அப்போது எங்களுக்கு அதிக தியேட்டர்கள் கொடுக்காமல் பிரச்சினை செய்யக் கூடாது என்றும் கூறி வருகிறார்களாம். விஜய் நடித்து பொங்கலுக்கு வெளிவந்த 'வாரிசு' படத்தின் தெலுங்கு டப்பிங்கிற்கு அதிக தியேட்டர்கள் கொடுக்கக் கூடாது என்று சர்ச்சை எழுந்தது. படத்தின் வெளியீட்டையும் அதனால், சில தினங்கள் தள்ளி வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




