'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
கீர்த்தி சுரேஷ் தற்போது தெலுங்கில் நடித்து முடித்துள்ள படம் தசரா. நானி, சமுத்திரகனி, தீக்ஷித் ஷெட்டி, மீரா ஜாஸ்மின், பிரகாஷ்ராஜ், ரோஷன் மேத்யூ, சாய்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் ஒடலா இயக்கி உள்ளார். சந்திரன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
நானி படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயராகும் படம் என்கிறார்கள். ஸ்ரீலட்சுமி வெங்கடேஸ்வரா நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் வருகிற மார்ச் 30ந் தேதி தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் மற்றும் இந்தியில் பான் இந்தியா படமாக வெளியாகிறது.
இந்த நிலையில் இதன் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. நிறைவு நாளில் கீர்த்தி சுரேஷ் படத்தில் ணியாற்றிய 130 பேருக்கு தலா 2 கிராம் வீதம் தங்க காசுகளை பரிசாக வழங்கினார். கீர்த்தி இதற்கு முன் நடித்த பெரும்பாலான படங்களின் நிறைவு நாளில் இதே போன்று கலைஞர்களுக்கு தங்க காசு வழங்கியது குறிப்பிடத்தக்கது.