'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நடிகர் கவுதம் கார்த்திக் சில ஆண்டுகளாகவே வருடத்திற்கு ஒரு படம் தான் நடித்து. இந்த ஆண்டு பத்து தல படத்தில் சிம்புவுடன் நடித்து முடித்துள்ளார். 16 ஆகஸ்ட் 1947 என்ற படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில் அடுத்து அவா் ‛கிரிமினல்' என்ற படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை பர்சா பிக்சர்ஸ், பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் மீனாட்சி சுந்தரம், கார்த்திகேயன் தயாரிக்கிறார்கள். தக்ஷினா மூர்த்தி ராமர் என்ற அறிமுகம் இயக்குனர் இயக்குகிறார். பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்கிறார், சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். கவுதம் கார்த்திக்குடன் சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
மதுரையை கதை களமாக கொண்ட கிரைம் த்ரில்லராக உருவாகும் இந்தபடம் ஒரு கிரிமினலுக்கும், போலீஸ் அதிகாரிக்குமான மோதல் கதையாக தயாராகிறது. இதில் கிரிமினலாக கவுதம் கார்த்திக்கும், போலீஸ் அதிகாரியாக சரத்குமாரும் நடிக்கிறார்கள்.