'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! |
கன்னட சினிமாவில் அறிமுகமாகி இப்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் ஹிந்தியிலும் கால்பதித்து அங்கும் நடித்து வருகிறார். இந்நிலையில், காந்தாரா படத்தை பார்க்கவில்லை என கூறியது, கன்னட சினிமாவை புறக்கணிப்பது மாதிரியாக அவர் நடந்து கொள்வது என அவர் மீது தொடர் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் சிலமாதங்களாக ராஷ்மிகா நிறைய டிரோல்களில் சிக்குகிறார்.
தன் மீதான விமர்சனங்களுக்கும், டிரோல்களுக்கும் ராஷ்மிகா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது : ‛‛ஓராண்டாகவே என்னை நிறையபேர் டிரோல் செய்கிறார்கள். உடற்பயிற்சி செய்தால் பையன் என்கிறார்கள். இல்லையெனில் பருமனாக இருப்பதாக சொல்கிறார்கள். பேசாமல் இருந்தால் திமிரு என்கிறார்கள். பேசினாலும் தவறு என்கிறார்கள். நான் என்ன தான் செய்வது. சினிமாவை விட்டு நான் விலக வேண்டும் என நினைக்கிறார்களா. என்னதான் உங்களுக்கு பிரச்னை. உங்களின் வார்த்தைகள் என்னை காயப்படுத்துகின்றன. எனக்கு எதிராக வெறுப்புணர்வை பரப்புவது ஏன் என புரியவில்லை'' என்றார்.