டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! | முதல்முறையாக ஜோடி சேரும் நானி, பூஜா ஹெக்டே | வெங்கடேஷ் ஜோடியான கே.ஜி.எப் நாயகி! | பிப்ரவரி மாதத்தை குறிவைக்கும் இரண்டு வானம் படக்குழு | நவ., 7ல் ‛அதர்ஸ்' படம் ரிலீஸ் |

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க, ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விஷ்ணு விஷால், விக்ராந்த் கதாநாயகர்களாக நடிக்க சிறப்புத் தோற்றத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் 'லால் சலாம்'. இப்படத்தின் பூஜை இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றது.
இப்படத்திலிருந்து ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி திடீரென விலகியுள்ளார். அது குறித்து சமூக வலைத்தளத்தில், “மாற்ற முடியாத வேறுபாடுகள் காரணமாக 'லால் சலாம்' படத்தின் ப்ரீ புரொடக்ஷன் கட்டத்திலேயே நான் விலகிக் கொள்கிறேன். எதிர்காலத்தில் படத்தின் அனைத்து போஸ்டர்களிலும் என பெயரை நீக்க வேண்டும் என இதன் மூலம் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன்,” என படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் லைக்கா நிறுவனத்தை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.
படத்தின் பூஜையில் கூட பூர்ணிமா கலந்து கொண்டுள்ளார். அப்போது வைக்கப்பட்டிருந்த பேனர்களிலும் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது. படப்பிடிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வரும் நிலையில் அவர் விலகியிருப்பது திரையுலகத்தினரிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐஸ்வர்யாவும், பூர்ணிமாவும் நெருங்கிய தோழிகள் என்றும், அவர்களுக்குள் இப்படி ஒரு வேறுபாடு வந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.




