இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து பொங்கலுக்கு வெளிவந்த படம் 'வாரிசு'. இப்படம் 200 கோடி வசூலைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
அதனால் விஜய் மற்றும் படக்குழுவினருக்கு படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு ஐதராபாத்தில் நேற்று தனியாக ஒரு சக்சஸ் பார்ட்டி நடத்தினார். அந்த பார்ட்டியில் விஜய் கலந்து கொண்டு சிறப்பித்தார். வாரிசு வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். வெளியீட்டிற்கு முன்பாக சென்னையில் நடைபெற்ற இசை வெளியீட்டு நிகழ்வில் மட்டும் விஜய் கலந்து கொண்டார். அதற்குப் பிறகு ஐதராபாத்தில் நடந்த பிரஸ் மீட்டிலும், சென்னையில் நடந்த தேங்க்ஸ் மீட்டிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.
தெலுங்கில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா படங்களுக்குப் போட்டியாக 'வாரிசு' படம் வெளியானதால் அங்கு புரமோஷன் செய்ய விஜய் போவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் செல்லவில்லை. இருந்தாலும் நேற்றைய சக்ஸஸ் பார்ட்டி தனிப்பட்ட பார்ட்டி என்பதால் அவர் கலந்து கொண்டுள்ளார்.
நள்ளிரவில் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து இசையமைப்பாளர் தமன், “என்ன ஒரு தருணம், நன்றி அன்புள்ள விஜய் அண்ணா. இந்த உண்மையான உயரத்திலிருந்து இன்னும் வெளியில் வர முடியவில்லை. உண்மையான கொண்டாட்டம். விஜய் அண்ணா, எங்களது மொத்த குழுவினருடன், வாழ்நாள் முழுவதும் போற்ற வேண்டிய ஒரு தருணம்” என்று பதிவிட்டுள்ளார்.