இத்தாலிக்கு கமல் திடீர் பயணம் ஏன்? | 'நிலமெல்லாம் ரத்தம்' - ஆரம்பமானது தலைப்பு சர்ச்சை | சென்னையில் மூன்று நாட்கள் இஸ்ரேலிய திரைப்பட விழா | ‛பொன்னியின் செல்வன் 2' : ‛அக நக' முதல்பாடல் வெளியானது | அதிதி ஷங்கரின் அடுத்த படம் | தனுசுடன் மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் | விஜய் சேதுபதியை இயக்கும் மிஷ்கின் | இயற்கை விவசாயத்தில் இறங்கிய நடிகர் கிஷோர் | படப்பிடிப்பில் தவறாக நடந்தாரா யஷ்? - ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் | நிதின் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் |
இயக்குனர் சுந்தர் சி இயக்கிய அரண்மனை சீரிஸ் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படங்களில் ஹாரர் காட்சிகளுடன் காமெடியும் கலந்திருக்கும். அந்த வகையில் வெளியான அரண்மனை அடுத்தடுத்த படங்கள் வெற்றியை பெற்றது.
இந்த படங்களுக்கு பிறகு சுந்தர் சி, 'காபி வித் காதல்' படத்தை இயக்கினார். ஆனால் இந்த படம் போதிய வெற்றியை பெறவில்லை. இதையடுத்து 'அரண்மனை 4' படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கான பணிகளில் சுந்தர் சி ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் நடிகர் சந்தானமும், இயக்குனர் சுந்தர் சியும் இணைந்து தங்களது பிறந்தநாளை கொண்டாடினர். இந்த நிகழ்வில் முக்கியமாக நடிகர் விஜய் சேதுபதி கலந்துக் கொண்டார். இது 'அரண்மனை 4' படத்தை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. தற்போது 'அரண்மனை 4' படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும், சந்தானம் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது . லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் .