கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் | வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு | சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பார்களா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு | தாய் கிழவி : நீண்ட இடைவெளிக்குப் பின்…. | ஆஞ்சநேயர் பிறந்த ஊரில் பூஜையுடன் துவங்கிய 'ஜெய் ஹனுமான்' | தனுஷை குறிப்பிட்டு பேசிய சிவகார்த்திகேயன் : கொச்சியில் நடந்தது என்ன? | தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு புது நிர்வாகிகள் : பல பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுமா? | எந்த சத்தமும் இல்லாத 'ஜனநாயகன்' | பாலிவுட்டில் கால் பதிக்கும் அனுபமா |

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் ‛கேப்டன் மில்லர்'. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் சந்தீப் கிஷான், நிவேதா சதிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்று(ஜன., 22) குற்றாலத்தில் துவங்குகிறது. கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் தனுசுக்கு அண்ணனாக இப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் இன்று நடக்கும் இப்படத்தின் படப்பிடில் நடிகை பிரியங்கா மோகன் இணைந்துள்ளார். மேலும் படப்பிடிப்பு தளத்தலில் இருந்து அழகிய லொகேஷன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் . குற்றாலத்தில் இப்படம் தொடர்ந்து 80 நாட்களுக்கு படமாக்கப்படுகிறது . அதன் பிறகு தனுஷ் தான் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார் .