அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
சென்னை : சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள திரையரங்கில் இன்று (ஜன.,11) வெளியான நடிகர் அஜித் நடித்த ‛துணிவு' படம் திரையிடப்பட்டது. அப்போது அதிகாலையில் முதல் காட்சிக்காக ரசிகர்கள் ஒன்றுக்கூடி ஆரவாரம் செய்தனர். பட்டாசு வெடித்து, மேளதாளம் இசைத்து கொண்டாடினர். அப்போது பரத்குமார் (வயது 19) என்ற அஜித் ரசிகர் ஒருவர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த லாரி மீது ஏறி நடனமாடியுள்ளார். இதில், கீழே தடுமாறி விழுந்ததில் முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.