இரண்டு மாதத்திற்கு பிறகு ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் கணக்கு மீட்பு | ஷாருக்கான் மகளுக்கு அம்மாவாக நடிக்கும் தீபிகா படுகோன் | பின்சீட்டில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணியுங்கள் : சோனு சூட் உருக்கமான வேண்டுகோள் | ''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் |
வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா நடித்துள்ள ‛வாரிசு' படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று(ஜன., 11) ரிலீஸானது. குடும்ப படமாக வெளிவந்துள்ள இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தை அடுத்து மீண்டும் தன்னை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். தற்காலிகமாக விஜய் 67 என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பூஜை கடந்தமாதம் சென்னையில் நடந்தது. தொடர்ந்து சில நாட்கள் சென்னையில் படப்பிடிப்பும் நடந்தது.
லோகேஷின் ஸ்டைலில் கேங்ஸ்டர் படமாக இந்த படம் உருவாகிறது. அதனால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது. இதனால் லோகேஷ் கனகராஜ் எங்கு வெளியில் சென்றாலும் அவரிடம் முன் வைக்கப்படும் ஒரு கேள்வி விஜய் 67 பற்றிய அப்டேட். ஆனால் எல்லா இடங்களிலும் அவர் மவுனமே காத்து வருகிறார். அதோடு வாரிசு படம் வெளியான பிறகே விஜய் 67 பற்றிய அறிவிப்பு வரும் என கூறி வந்தார்.
இந்நிலையில் விஜய்யின் வாரிசு படத்தை சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றில் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்தார். பின்னர் வெளியே வந்த அவர், ‛‛வாரிசு படம் ரிலீஸிற்காகத் தான் இதுநாள் வரை காத்திருந்தோம். இனி விஜய் 67 படம் பற்றிய அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளிவரும்'' என தெரிவித்துள்ளார்.