ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் | ஹிருது ஹாருன் ஜோடியான சம்யுக்தா விஸ்வநாதன் | ஹீரோயின் ஆன 'பிக்பாஸ்' ஜனனி | பிளாஷ்பேக்: திருமண நாளில் படங்களை வெளியிட்ட கே.பாலாஜி | பிளாஷ்பேக்: மின்னி மறைந்த ஸ்ரீராம் | ஹிந்தியில் படத்துக்கு வரவேற்பு: புனேவுக்கு நடிகர் தனுஷ் விசிட் | தயாரிப்பாளர் ஆனார் 'டாடா' இயக்குனர்: கவுதம் ராம் கார்த்திக் அதில் ஹீரோ | 10 ஆயிரம் கண்டெயினர் யார்டில் படமாக்கப்பட்ட 'அனலி' |

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எப்போதும் பெரிய நடிகர்கள் திரைப்படங்கள் வெளியாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், பொங்கல் விடுமுறையை முன்னிட்டு இன்று (ஜன.,11) அதிகாலையிலேயே அஜித்தின் ‛துணிவு' படமும், விஜய்யின் ‛வாரிசு' படமும் வெளியானது.
இயக்குனர் எச்.வினோத் - நடிகர் அஜித்குமார் கூட்டணியில் தொடர்ந்து 3வது முறையாக வந்துள்ள ‛துணிவு'படம் நடுஇரவு 1 மணிக்கும், தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‛வாரிசு' படம் அதிகாலை 4 மணிக்கும் உலகம் முழுவதிலும் உள்ள திரையறங்குகளில் சிறப்பு காட்சி வெளியிடப்பட்டது. இதனால் முதல் காட்சியை கண்டுகளித்த அஜித், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.
முன்னதாக கடந்த 2014ல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் வீரம் மற்றும் விஜய்யின் ‛ஜில்லா' படங்கள் வெளியானது. 9 ஆண்டுகளுக்கு பிறகு இருவரின் படங்கள் மோதுவதால் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.




