''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்து தெலுங்கில் தயாராகி, பான் இந்தியா படமாக வெளிவந்து 1200 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளிய படம் 'ஆர்ஆர்ஆர்'.
ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் இப்படம் நேரடியாகக் களமிறங்கியுள்ளது. இதனிடையே, ஆஸ்கர் விருதுகளுக்கு முன்பாக அமெரிக்காவில் வழங்கப்படும் பிரபலமான 'கோல்டன் குளோப்' விருதுகளுக்காக 'ஆர்ஆர்ஆர்' படம் இரண்டு பிரிவுகளில் 'நாமினேட்' ஆகியது.
ஆங்கிலம் அல்லாத மொழிகளில் சிறந்த படத்திற்கான நாமினேஷன் மற்றும் சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான (நாட்டு.. நாட்டு…) நாமினேஷனிலும் பங்கேற்றது. இந்நிலையில், இன்று கோல்டன் குளோப் விருது அறிவிக்கப்பட்டது. இதில், ‛நாட்டு.. நாட்டு…' பாடல், சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது.
விருதை பெற்ற பின்னர் விழா மேடையில் பேசிய கீரவாணி, "இந்த விருதுக்கு நன்றி. எல்லோரும் சொல்வது போன்று இந்த விருது எனக்கானது அல்ல. எனது சகோதரரும், இந்த பட இயக்குநருமான ராஜமவுலிக்கு உரியது. என் உழைப்பின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கை, ஆதரவுக்கு நன்றி. மற்றும் பிரேம் ரஞ்சித், காலபைரவா, சந்திரபோஸ், ராம் சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி" என்றார்.
இதனையடுத்து, படக்குழுவினரும், தெலுங்குத் திரையுலகத்தினரும், மற்ற மொழி சினிமா பிரபலங்களும் மகிழ்ச்சியுடன், தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.