தொடர்ந்து குத்து பாடல் வாய்ப்பு - மறுக்கும் தமன்னா | உண்மையிலேயே பஹத் பாசிலுக்கு தான் அந்த தைரியம் உண்டு : நடிகை ஊர்வசி புகழாரம் | கமலுக்கான கதையை மோகன்லால் - மம்முட்டி படத்திற்கு பயன்படுத்தவில்லை : இயக்குனர் விளக்கம் | மூன்றாவது முறையாக ஜோடி சேரும் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | பெஞ்சல் புயல் : ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கிய சிவகார்த்திகேயன் | சூர்யா 45வது பட படப்பிடிப்பில் இணைந்தார் த்ரிஷா | இயக்குனர் அவதாரம் எடுக்கும் சந்தானம் | 'ஒரு பெண் போல சண்டை செய்' - சமந்தாவின் பதிவு யாருக்காக? | தமிழகத்தில் ஒரு கோடி பேர் பார்த்த 'அமரன்' | புஷ்பா 2 பட குழுவுக்கு நன்றி தெரிவித்த சாம் சி.எஸ் |
கார்த்தி நடித்த விருமன் படத்தை அடுத்து ஆர்யா நடிப்பில் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்தை இயக்குகிறார் முத்தையா. ஆக்சன் கதையில் உருவாகி வரும் இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்த சித்தி இத்னானி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவில்பட்டியில் நடந்து வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் ஒரு கருப்பு நிற உடையில் நாற்காலியில் ஆர்யா அமர்ந்திருப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது.
இந்த படம் பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் ஒரு கிராமத்தில் அரசியல்வாதிகள் ஓட்டுக்காக எப்படி எல்லாம் மக்களை பிரிக்கிறார்கள் என்ற கதையை மையமாகக் கொண்ட கதையில் உருவாகி வருகிறது. இதில் ஆர்யா முஸ்லிம் இளைஞராக நடிக்கிறார். இந்த நிலையில் இப்படத்தில் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி நடித்த பவானி என்ற கேரக்டரின் இளமைக்கால கெட்டப்பில் நடித்த மாஸ்டர் மகேந்திரன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தின் பிளாஷ்பேக்கில் இடம்பெறும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் மாஸ்டர் மகேந்திரன் நடிக்கிறார். அவர் நடிக்கும் காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளது.