இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 66வது படம் வாரிசு. தில்ராஜூ தயாரித்து உள்ள இந்த படம் 80 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். தமன் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவரும் நிலையில் வருகிற 11ம் தேதி வாரிசு படம் திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் தற்போது வாரிசு படத்தில் புரொடக்சன் டிசைனராக பணியாற்றியுள்ள சுனில் பாபு இன்று மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளதாக அவரது சோசியல் மீடியாவில் ஒரு சோகமான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 50 வயதாகும் சுனில் பாபு, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிப் படங்களிலும் பணியாற்றி இருக்கிறார்.