இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

துணிவு படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் தனது 62வது படத்தில் நடிக்க போகிறார் அஜித்குமார். ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்தில் ஒரு பிரபலமான வில்லன் நடிகரைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என்று பலரிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வந்த விக்னேஷ் சிவன் தற்போது தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்துள்ள அரவிந்த்சாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
அதோடு, தனி ஒருவன் படத்தைப் போலவே இந்த படத்திலும் ஒரு மாஸான வில்லனாக அரவிந்த்சாமி நடிக்க இருப்பதாகவும் கூறுகிறார்கள். மேலும் இதற்கு முன்பு சுரேஷ்மேனன் இயக்கத்தில் அரவிந்த்சாமி -ரகுவரன் இணைந்து நடித்த பாசமலர்கள் என்ற படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார் அஜித் குமார். அதையடுத்து அவர்கள் எந்தப் படத்திலும் இணையவில்லை. இந்த நிலையில் தற்போது ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க போகிறார் அரவிந்தசாமி. இது குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.