கீர்த்தி சுரேஷ் 'ஒல்லியாக' மாற இதுதான் காரணம் | என்னிடமும் ரஜினி சாயலை பார்க்கலாம் : சிவகார்த்திகேயன் | டிஜிட்டலில் வரும் அஜித்தின் ‛அமராவதி' | மறைமுகமாக தனது அடுத்த படத்தை உறுதி செய்த சிவகார்த்திகேயன் | இது ரகசிய திருமணம் இல்ல ஹேப்பி மேரேஜ் : பிரியங்கா விளக்கம் | பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் - நடிகை ரிஹானா அட்வைஸ் | திரைப்படத்திற்காக ஸ்கிரிப்ட் தயார் பண்ணும் ஸ்ருதிஹாசன் | அஜித் 62 அறிவிப்பு எப்போது? - வெளியான தகவல் | விடுதலை படத்தில் 11 இடங்களில் ‛மியூட்' | சமந்தாவை கவர்ந்த அல்லு அர்ஜுனின் மகள் ஆரா |
சமீபத்தில், சமந்தா நடித்த 'யசோதா' படம், ஐந்து மொழிகளில் வெளியானது. அடுத்து, 'சாகுந்தலம்' படம் வெளியாக உள்ளது. விஜய் தேவரகொண்டாவுடன், 'குஷி' என்ற படத்திலும் சமந்தா நடித்து வருகிறார். இதனிடையே, 'மயோசிடிஸ்' என்ற அரிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு உள்ள சமந்தா, 'யசோதா' பட டப்பிங்'கின் போதே சிகிச்சை பெறத் துவங்கினார். தொடர் சிகிச்சையில் சமந்தா தேறி வந்தாலும், படப்பிடிப்பில் பங்கேற்காமல் இருந்தார்.
இந்நிலையில், நோயின் தீவிரத்தைத் தொடர்ந்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி, உயர்ரக சிகிச்சைக்காக சமந்தா, தென்கொரியா நாட்டிற்கு செல்ல திட்டமிட்டு உள்ளார். இதனால், நடிப்புக்கு நீண்ட காலம் ஓய்வு கொடுக்க, சமந்தா திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது சகுந்தலம் படத்தில் நடித்துள்ள சமந்தா அப்படத்தின் டப்பிங் வேலையை முடித்த தகவலை வெளியிட்ட நிலையில், நடிகை சமந்தா மும்பை விமான நிலைத்திற்கு சென்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில், சமந்தா எப்போதும் இல்லாத வகையில் மிகவும் சோகமாகவும், உடல் மெலிந்தும் நடந்து வருகிறார். இந்த காட்சிகளை பார்த்த அவரது ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.