காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்துள்ள 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் ரசிகர்கள் இருக்கும் பக்கம் சென்று அவர்களுக்குக் கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் விஜய்.
நிகழ்ச்சியின் போது மேடை ஏறிய விஜய், மேடையிலிருந்தே அரங்கத்தைச் சுற்றி ரசிகர்களின் ஆர்ப்பரிப்புடன் ஒரு செல்பி வீடியோவை எடுத்தார். நேற்று நள்ளிரவில் அந்த வீடியோவை விஜய்யின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டது. “என் நெஞ்சில் குடியிருக்கும்” என்ற ஹேஷ்டேக்குடன் பதிவு செய்யப்பட்ட அந்த வீடியோ, சில மணி நேரங்களிலேயே 5 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
நேற்றைய விழாவில் விஜய் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். 'வாரிசு' படம் அவருக்கு முழு திருப்தியைத் தந்திருப்பதுதான் அதற்குக் காரணம் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.