பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் |

மலையாள திரையுலகில் நடிகராக மட்டும் இல்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் படங்களை தயாரிப்பதுடன் விநியோகமும் செய்து வருகிறார் பிருத்விராஜ். இந்த நிலையில் தற்போது பிருத்விராஜ், மோகன்லால் படங்களை தொடர்ந்து தயாரிக்கும் ஆண்டனி பெரும்பாவூர், மம்முட்டியின் ஆஸ்தான தயாரிப்பாளராக கருதப்படும் ஆன்டோ ஜோசப் மற்றும் தயாரிப்பாளர் மேஜிக் பிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோருக்கு சொந்தமான மொத்தம் 50 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு துவங்கிய இந்த ரெய்டு வெள்ளி அதிகாலை4.30 மணிக்குத்தான் முடிந்துள்ளது.
கேரளாவில் மட்டுமல்லாமல் இவர்களுக்கு சென்னை மற்றும் மும்பையில் சொந்தமாக இருக்கும் இடங்களிலும் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் சில முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் வருமானவரித் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த திடீர் ரெய்டு மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தினாலும், இது வழக்கமாக நடத்தப்படும் சோதனைதான் என்று சம்பந்தப்பட்டவர்கள் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது.