பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா நடித்துள்ள ‛வாரிசு' படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இதை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். அன்றைய தினம் நடிகர் அஜித்தின் ‛துணிவு' படமும் ரிலீஸாகிறது. இதை வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்துள்ளார். இரண்டு படங்களும் ஒரேநாளில் வெளியாவதால் தியேட்டர்கள் ஒதுக்குவதில் சில முரண்பாடுகள் நீடிக்கின்றன. இரண்டு படங்களுக்கும் சமமான தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் சொல்கின்றனர்.
இதுஒருபுறம் இருக்க தெலுங்கில் வாரிசு படத்தை அங்கு திரையிட எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக அங்கு பண்டிகை காலங்களில் தெலுங்கு படங்களுக்கே முன்னுரிமை தர வேண்டும் என அங்குள்ள தயாரிப்பாளர்கள் குரல் கொடுத்தனர். இதனால் வாரிசு படம் அங்கு வெளியாவதில் சிக்கல் நீடித்தாலும் பின்னர் அது பேசி சரி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்த பிரச்னை அவ்வப்போது எதிரொலிக்கிறது.
தமிழகத்தை பொருத்தமட்டில் ‛துணிவு' படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது. ‛வாரிசு' படத்தை விஜய்யின் ‛மாஸ்டர்' படத்தை தயாரித்த லலித் வெளியிடுகிறார். துணிவு படத்திற்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், வாரிசு படத்திற்கு குறைந்த தியேட்டர்களே ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பான சர்ச்சைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் வாரிசு தயாரிப்பாளரான தில் ராஜூ அளித்த ஒரு பேட்டியில், ‛‛தமிழ் சினிமாவில் விஜய் தான் நம்பர் 1 நடிகராக உள்ளார். அஜித்துடன் ஒப்பிடும்போது அவர் தான் டாப்பில் உள்ளார். தமிழகத்தில் உள்ள 800 தியேட்டர்களில் வாரிசு, துணிவு படங்களுக்கு சரி பாதி ஒதுக்கி உள்ளனர். இது ஏற்புடையதல்ல. இது ஒரு தொழில், வணிக ரீதியாக பார்க்கும் போது வாரிசு படத்திற்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்க வேண்டும். இதுதொடர்பாக சென்னைக்கு சென்று உதயநிதியை சந்தித்து பேச உள்ளேன்'' என்றார்.
சும்மாவே விஜய், அஜித் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் மல்லுக்கட்டுவார்கள். இப்போது தில் ராஜூன் இந்த பேட்டியால் இவர்களின் சண்டை அதிகமாகிவிட்டது. அஜித்தை விட விஜய் தான் டாப் என விஜய் ரசிகர்கள் அஜித்தையும், துணிவு படத்தையும் கடுமையாக டிரோல் செய்து வருகின்றனர். இதற்கு பதிலடியாக அஜித் ரசிகர்களும் விஜய்யையும், வாரிசு படத்தையும், தில் ராஜூவையும் டிரோல் செய்கின்றனர்.