'ரெட்ரோ' - சொந்தக் குரலில் டப்பிங் பேசிய பூஜா ஹெக்டே | தனுஷ் படம் குறித்து பகிர்ந்த கிர்த்தி சனோன் | சர்ச்சை வீடியோ விவகாரம் : பிக்பாஸ் விக்ரமன் வெளியிட்ட தகவல் | 25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு கம்பேக் தரும் சங்கீதா | சர்தார் 2 டப்பிங் பணிகளை தொடங்கிய கார்த்தி | ரம்பாவின் சொத்து மதிப்பு 2000 கோடி: தயாரிப்பாளர் தாணு தந்த தகவல் | ஸ்ரீதேவியின் 'மாம்' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் மகள் குஷி கபூர் | ஹிந்தியில் 'டாப் ஸ்டார்' ஆகும் ராஷ்மிகா மந்தனா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனியை அரங்கேற்றும் லிடியன் நாதஸ்வரம் | நீண்ட நாள் நண்பரை கை பிடிக்கும் அபிநயா |
இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லீ, ‛ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து ‛‛தெறி, மெர்சல், பிகில்'' என விஜய்யை வைத்து மூன்று படங்களை கொடுத்த இவர் தற்போது ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து ‛ஜவான்' படத்தை இயக்கி வருகிறார்.
அட்லீ கடந்த 2014, நவ., 9ல் தான் காதலித்து வந்த நடிகை பிரியாவை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து மனைவியுடன் சேர்ந்து 'A for Apple Productions' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். இவர்களின் ரொமான்டிக் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும்.
இந்நிலையில் இந்த தம்பதியர் வாழ்வின் அடுத்தக்கட்டத்திற்கு பயணிக்க உள்ளனர். அதாவது இருவரும் பெற்றோர் ஆக போகிறார்கள். பிரியா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். ‛‛எங்களுக்கு கொடுத்த அன்பையும், ஆதரவையும், ஆசீர்வாதத்தையும் எங்கள் குழந்தைக்கும் நீங்கள் கொடுக்க வேண்டும். சந்தோசத்தின் குவியலை தரப்போகும் அழகிய மழலையின் தருணங்களை இவ்வுலகிற்கு கொண்டு வரபோவதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அந்த தருணத்தை காண நாங்கள் ஆவலாய் காத்து கொண்டு இருக்கிறோம் " என அட்லீ - பிரியா மகிழ்ச்சி உடன் தெரிவித்துள்ளனர்.