ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
முன்னணி நடிகை பாவனா தனது சொந்த வாழ்வில் நடந்த சில சோகமான பிரச்சினைகள் காரணமாக படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு 'என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்நு'. படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் தொடர்பான ஒரு நேர்காணனில் சைபர் க்ரைம் குறித்து அவர் பேசியுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: மீண்டும் சினிமாவில் நடிக்க கூடாது என்றுதான் முடிவு செய்திருந்தேன். சினிமாதான் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது, என்னிடமிருந்து எல்லாவற்றையும் பறித்தது. மீண்டும் சினிமாவுக்கு வந்தால் மன அமைதி போய்விடும் என்று நினைத்தேன். என் நட்புகள் என்னை மீண்டும் அழைத்து வந்திருக்கின்றன.
எனக்கு எதிராக சைபர் தாக்குதல்கள் அதிகம் நடந்தன. இணையதளம் மூலம் பிறரை மிரட்டுவது, புகழுக்கு களங்கம் ஏற்படுத்துவது இன்று தொழிலாகி விட்டது. வேலைக்கு ஆட்களை அமர்த்தி இதை செய்கிறார்கள். இவரைத் தாக்க வேண்டும். அந்தப் படத்தை மோசமாக விமர்சிக்க வேண்டும் என்று அதற்காகப் பணம் செலவழித்து வருகிறார்கள். எனக்கு தெரிந்தவர்களே, எனக்கு எதிரான வேலைகளைச் செய்தார்கள். எனது கடினமான காலகட்டத்தில் என் முதுகுக்குப் பின்னால் பேசியவர்களை நான் மறந்துவிடவில்லை.
இவ்வாறு பாவனா கூறியுள்ளார்.