23 வருடங்களுக்கு பிறகு பிரசாந்த் - ஹரி கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு | விஜய்யின் ‛லியோ' பட சாதனையை முறியடித்த அஜித்தின் ‛குட் பேட் அக்லி' டிரைலர்! | பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‛கொம்பு சீவி' | சத்யராஜ் பாணியில் கதை தேடும் ‛மர்மர்' நாயகன் தேவ்ராஜ்! | தமிழகத்திற்காக மற்ற மாநிலங்களிலும் ‛குட் பேட் அக்லி' படத்தின் அதிகாலை காட்சி ரத்து! | ரோமியோக்களால் மொபைல் நம்பரை மாற்றிய நடிகை | விரும்பிய கல்லூரியில் சேர குத்துச்சண்டை பழகிய பிரேமலு ஹீரோ | புஷ்பா 2 சம்பவம் எதிரொலி ; ஆர்யா-2 ரீ ரிலீஸான தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு | சன்னி தியோலை நேரில் சந்தித்த பிரபாஸ்: ‛ஜாட்' படத்திற்கு வாழ்த்து | பிரித்விராஜ்க்கு வருமான வரித்துறை நோட்டீஸ் ; எம்புரான் படம் காரணம் அல்ல |
ஒரு காலத்தில் ரீ-ரிலீஸ் தியேட்டர்கள் என்றே பல ஊர்களில் தியேட்டர்கள் இருக்கும். அங்கு புதிய படங்கள் எதுவும் வெளியாகாது. பழைய படங்களைத்தான் அதிகமாகத் திரையிடுவார்கள். அல்லது நான்கு அல்லது ஐந்து வாரங்களுக்கு மேல் ஒரே தியேட்டரில் ஓடிய புதிய படத்தை அங்கிருந்து தூக்கிவிட்டு அந்த பழைய படங்களைத் திரையிடும் தியேட்டர்களில் தொடர்ந்து திரையிடுவார்கள்.
பிலிமிலிருந்து டிஜிட்டலுக்கு திரைப்படத் திரையீடுகள் மாறிய பிறகு இந்த ரீ-ரிலீஸ் வியாபாரம் முற்றிலுமாக அழிந்து போனது. இருந்தாலும் 'கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், வசந்த மாளிகை, ஆயிரத்தில் ஒருவன்,' உள்ளிட்ட அந்தக் கால காவியத் திரைப்படங்களை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கொரோனா காலத்திற்கு முன்பாக ரீ-ரிலீஸ் செய்து நல்ல வசூலைப் பெற்றார்கள்.
ஆனாலும், 80, 90, 2கே ஆண்டுகளில் வெளிவந்த படங்களை ரீ-ரிலீஸ் செய்ய பலரும் ஆர்வம் காட்டவில்லை. தெலுங்கில் கடந்த சில மாதங்களாக முன்னணி நடிகர்களின் பழைய படங்களை அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீஸ் செய்யும் டிரெண்ட் ஆரம்பமானது. தமிழிலும் சில படங்களை மட்டும் சிறப்புக் காட்சிகளாக மட்டும் ரிலீஸ் செய்தார்கள்.
அதே சமயம் ரஜினிகாந்த் நடித்து 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த 'பாபா' படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றி, சில காட்சிகளைக் குறைத்து இரு தினங்களுக்கு முன்பு டிசம்பர் 10ம் தேதி தமிழகம் மட்டுமல்லாது பெங்களூரு உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் வெளியிட்டார்கள். ஒரு புதிய படத்தை வெளியிடுவது போன்று படத்தை நன்றாகவே ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தார்கள். கடந்த இரண்டு நாட்களில் கடந்த வாரம் வெளியான புதிய படங்களை விடவும் 'பாபா' படத்தின் வசூல் சிறப்பாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'பாபா' படத்தின் மூலம் ரீ-ரிலீஸ் டிரெண்ட்டை ரஜினிகாந்த் மீண்டும் ஆரம்பித்து வைத்துள்ளது அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்ல மற்ற நடிகர்களின் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களின் முந்தைய வெற்றிப் படங்களை சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் மீண்டும் இது போல் செய்யத் தூண்டும். புதிய படங்கள் கை கொடுக்காத நிலையில் இப்படியான பழைய வெற்றிப் படங்கள் சரியான நாட்களில் மீண்டும் வெளியானால் நல்ல வசூலைப் பெற முடியும் என தியேட்டர்காரர்களும் தெரிவிக்கிறார்கள்.