தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் |

ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்து தெலுங்கில் தயாராகி, பான் இந்தியா படமாக வெளிவந்து 1000 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளிய படம் 'ஆர்ஆர்ஆர்'.
ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் இப்படம் நேரடியாகக் களமிறங்கியுள்ளது. இதனிடையே, ஆஸ்கர் விருதுகளுக்கு முன்பாக அமெரிக்காவில் வழங்கப்படும் பிரபலமான 'கோல்டன் குளோப்' விருதுகளுக்காக 'ஆர்ஆர்ஆர்' படம் இரண்டு பிரிவுகளில் 'நாமினேட்' ஆகியுள்ளது.
ஆங்கிலம் அல்லாத மொழிகளில் சிறந்த படத்திற்கான நாமினேஷன் மற்றும் சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான (நாட்டு.. நாட்டு…) நாமினேஷனிலும் பங்கேற்கிறது. இது பற்றி அறிவிப்பை அந்த விருதுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
'ஆர்ஆர்ஆர்' படம் 'கோல்டல் குளோப்' விருதுக்கான போட்டியில் களமிறங்கியுள்ளதால் படக்குழுவினரும், தெலுங்குத் திரையுலகத்தினரும், மற்ற மொழி சினிமா பிரபலங்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
படத்தின் இயக்குனர் ராஜமவுலி, “கோல்டன் குளோப் விருதுக்காக ஆர்ஆர்ஆர் படத்தை இரண்டு பிரிவுகளில் நாமினேஷன் செய்துள்ள தேர்வுக் குழுவுக்கு நன்றி, மொத்த குழுவினருக்கும் எனது பாராட்டுக்கள். தொடர்ந்து ஆதரவையும், அன்பையும் அளித்து வரும் ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் நன்றி” என டுவீட் செய்துள்ளார்.
இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், நடிகர் பிரபாஸ் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் அவர்களது வாழ்த்துகளை இயக்குனர் ராஜமவுலிக்கும் படக்குழுவினருக்கும் தெரிவித்துள்ளார்கள்.