சாய் பல்லவியின் ‛ஏக் தீன்' ஹிந்தி படம் டீசருடன் ரிலீஸ் தேதி அறிவிப்பு | சிறிய படங்களை கண்டு கொள்ளாத ஓடிடி நிறுவனங்கள் : வசந்தபாலன் காட்டம் | பாலிவுட்டில் பரவும் தனுஷ், மிருணாள் தாகூர் திருமணத் தகவல் | கமலை சந்தித்து ஆசி வாங்கிய ஊர்வசியின் மகள் | திரிஷ்யம் 3 படத்துடன் மோதும் வாழ 2 | மரகத நாணயம் 2 படத்தில் பிரியா பவானி சங்கர் | விஜய் படம் எப்ப ரிலீஸ் : அஜித் படம் அறிவிப்பு எப்ப வரும் | தலைப்பு ‛தி மம்மி ரிட்டர்ன்ஸ்' : ஆனா பேய் படமில்லையாம் | விஜய் சேதுபதி கைவசம் வரிசை கட்டும் படங்கள் | பொங்கல் படங்களில் வின்னர் எது? : 100கோடியை தாண்டுமா பராசக்தி |

பரத் தற்போது நடித்து முடித்துள்ள ‛லவ்' அவருக்கு 50வது படம். இந்த படத்தை ஆர்.பி.பாலா என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். வாணிபோஜன், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கிறார், ரோனி ரபேல் இசை அமைத்துள்ளார்.
தனது 50வது படம் குறித்து பரத் கூறியிருப்பதாவது: எல்லா மொழிகளிலும், எல்லா படத்தையும் கணக்கிடும்போது இது எனக்கு 50 படம் என்பதில் மகிழ்ச்சி. நான் காதல் படத்தின் மூலம்தான் ஹீரோவானேன். எனது 50வது படம் அதே டைட்டிலுடன் வெளியாவது கூடுதல் மகிழ்ச்சி. சினிமாவுக்கு வந்து 19 ஆண்டுகள் ஆகிறது. முதல் படம் தொடங்கி இப்போது வரை எந்த பின்புலமும் இல்லாமல் நான் தனித்தே பயணம் செய்திருக்கிறேன். அதில் வெற்றியையும், தோல்வியையும் சந்தித்திருக்கிறேன். இரண்டையும் சமமாக கருதுவதால் நிதானமாக பயணிக்க முடிகிறது. அடுத்து முன்னறிவான் என்ற படத்திலும் வசந்தபாலன் இயக்கும் படத்திலும் நடிக்கிறேன்.
லவ் படத்தின் கதை முழுக்க ஒரு அபார்ட்மெண்டில் நடப்பது, அதற்கேற்ற பரபரப்பான திரைக்கதை இருக்கிறது. திரைக்கதையில் நிறைய திருப்பங்கள் இருக்கிறது. வாணி போஜனுடன் மிரள் படத்தில் நடிக்கும் போது இந்தக்கதை கேட்க சொன்னேன், அவர் உடனே பிடித்து இப்படத்தில் வந்தார். அவருக்கு எனக்கு இணையான பாத்திரம் மிகச் சிறப்பாக போட்டி போட்டு நடித்துள்ளோம். இப்படம் ரசிகர்களை கண்டிப்பாகத் திருப்திப்படுத்தும். என்றார்.