டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி |
புகழ்பெற்ற பழைய படங்கள் மறுதிரையீடு செய்யப்படுவது அதிகரித்து உள்ளது. எம்.ஜி.ஆரின் சிரித்து வாழ வேண்டும், சிவாஜியின் பட்டிக்காடா பட்டணமா படங்கள் சமீபத்தில் மறு திரையீடு செய்யப்பட்டது. ரஜினின் பாபா படம் ரஜினி பிறந்த நாளையொட்டி நாளை டிச., 10ம் தேதி வெளியிடப்படுகிறது.
இந்த நிலையில் ரஜினி நடித்த சிவாஜி படம் சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் மறுதிரையீடு செய்யப்படுகிறது. பிவிஆர் மற்றும் சினிபொலிஸ் ஆகிய திரையரங்குகளில் இன்று தொடங்கி 15ம் தேதி வரை திரையிடப்படுகிறது.
2007ம் ஆண்டு வெளியான 'சிவாஜி' படத்தில் ரஜினியுடன் ஸ்ரேயா, சுமன், விவேக் உள்பட பலர் நடித்திருந்தனர், ஷங்கர் இயக்கி இருந்தார் ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது. கருப்பு பணத்தை மையமாகக் கொண்ட கதையாக வெளிவந்து படம் வரவேற்பை பெற்றது.