டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் | 7 ஆண்டுகளுக்கு பின் அதர்வா நடித்த கணிதன் டிவியில் ஒளிபரப்பு | சாருகேசி: திரைப்படமாகும் நாடகம் | நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண தகவல் வதந்தி | ஜப்பானில் 100 நாட்கள் சாதனை படைத்த 'ஆர்ஆர்ஆர்' |
சுந்தரபாண்டியன், கும்கி படங்களின் மூலம் தமிழுக்கு வந்தவர் லட்சுமி மேனன், அதன்பிறகு பாண்டியநாடு, குட்டிப்புலி, நான் சிவப்பு மனிதன், ஜிகிர்தண்டா, மஞ்சப்பை, கொம்பன், வேதாளம், றெக்க என மளமளவென நடித்து முன்னேறினார். திடீரென நான் படிக்க போகிறேன் என்று போய்விட்டார். அதன்பிறகு வாய்ப்புகள் குறைந்தது. 5 ஆண்டுகளுக்கு பிறகு புலிக்குத்தி பாண்டி படத்தின் மூலம் திரும்பி வந்தார்.
தற்போது அவர் யோகிபாபுடன் நடித்துள்ள படம் மலை. அறிமுக இயக்குனர் முருகேஷ் இயக்கி உள்ளார். லெமன் லீப் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. நல்ல ரீ என்ட்ரிக்காக காத்திருக்கிறார் லட்சுமி மேனன். இந்த படத்தின் மூலமாவது வெற்றிமலை ஏறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.