'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பொன்ராம் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அனுகீர்த்திவாஸ் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளியான படம் 'டிஎஸ்பி'. இதுவரை விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த படங்களில் இந்தப் படத்திற்குத்தான் மிகவும் மோசமான விமர்சனங்கள் வந்தது. ரசிகர்களின் வரவேற்பையும் பெறாத இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஏன் நடித்தார் என அவரை நேசிக்கும் ரசிகர்களே கேள்வி எழுப்புகிறார்கள்.
படத்திற்கு முதல் நாளிலேயே வரவேற்பும் வசூலும் இல்லாத நிலையில் மறுநாளே இயக்குனர் பொன்ராம், விஜய் சேதுபதி படம் வெற்றி என 'கேக்' வெட்டி கொண்டாடினார்கள். ஆனால், அந்த புகைப்படங்கள் விஜய் சேதுபதியின் டுவிட்டர் தளத்தில் வெளியிடப்படவில்லை. பாக்ஸ் ஆபீசிலும் படம் படுதோல்வி என்று தெரிந்தும் விஜய் சேதுபதியின் டுவிட்டர் கணக்கைப் பார்க்கும் 'அட்மின்' படத்தை ஒரு வெற்றிப் படம் போலவே தொடர்ந்து டுவீட் செய்து வருகிறார். ஆனால், கமெண்ட்டுகளை 'ஆப்' செய்துவிட்டு மட்டும் டுவீட் செய்கிறார்கள்.
படம் வெளியான டிசம்பர் 2ம் தேதியன்று மட்டும் கமெண்ட்டுகள் 'ஆன்' செய்யப்பட்டிருந்தன. அதற்குப் பிறகு பதிவிட்ட டுவீட்டுகள் எதிலும் கமெண்ட் பகுதி 'ஆப்' செய்யப்பட்டே பதிவிடப்படுகின்றன.
விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து 2018ல் வெளிவந்த '96' படத்திற்குப் பிறகு வெளிவந்த படங்கள் 'காத்து வாக்குல ரெண்டு காதல், மாமனிதன்' படங்கள் மட்டுமே சுமாராக ஓடியது. மற்ற படங்கள் தோல்வியைச் சந்தித்துள்ளன. தமிழைத் தவிர தெலுங்கு, ஹிந்தி என நடித்து வரும் விஜய் சேதுபதி தமிழில் சரியான கதைகளைத் தேர்வு செய்து நடிக்க வேண்டும் என அவர்களது ரசிகர்களும், வினியோகஸ்தர்களும் எதிர்பார்க்கிறார்கள்.