சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

2002ல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் பாபா. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் அவரே படத்தை தயாரித்தும் இருந்தார். இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
தற்போது பாபா திரைப்படம் நவீன தொழில் நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு டிஜிட்டலில் ஒவ்வொரு பிரேமும் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பாடல்கள் அனைத்தும் ரீமிக்ஸ் செய்யப்பட்டு டால்பி மிக்ஸ் ஒலி அமைப்புக்கு மாற்றப்பட்டு உள்ளது.ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி பாபா படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பாபா படத்தின் புதிய காட்சிகளுக்கு ரஜினி டப்பிங் பேசி முடித்திருந்தார்.
இந்நிலையில் பாபா படத்தின் புதிய டிரைலரை ரஜினிகாந்த் நேற்று வெளியிட்டுள்ளார். இந்த டிரைலர் யூடியூபில் வைரலாகி வருகிறது .




