பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
சினிமா பிரபலங்களுக்கு வளர்ப்புப் பிராணிகள் மீது எப்போதுமே கொள்ளைப் பிரியம் இருக்கும். அதிலும் பல நடிகைகள் நாய்களை வளர்ப்பதில் தனி ஆர்வத்துடன் இருப்பார்கள். சிலர் பூனைகளையும் வளர்த்து வருகிறார்கள்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், தனது செல்ல நாய்க்குட்டியான 'நைக்' உடன் நாகர்கோவிலில் கொஞ்சி விளையாடி மகிழ்ந்திருக்கிறார். “இன்னும் அறிவிக்கப்படாத ஒரு படத்திற்காக, அதிக மகிழ்ச்சி, நினைவுகள் ஆகியவற்றுடன் நாகர்கோவிலில் ஒரு வாரம்” எனப் பதிவிட்டு தனது தோழிகளுடன் இருக்கும் புகைப்படங்கள், நாயுடன் விளையாடி மகிழும் வீடியோக்கள் ஆகியவற்றைப் பதிவிட்டுள்ளார்.
ஒரு வாரத்திற்கு முன்னதாக தனது குடும்பத்தினருடன் திருநெல்வேலி அருகில் உள்ள திருக்குறுங்குடி கிராமத்தில் அவர்களது பூர்வீக வீட்டிற்குச் சென்றது, குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வழிபட்டது பற்றி கீர்த்தி பதிவிட்டிருந்தார். கீர்த்தியின் அம்மா நடிகை மேனகா நாகர்கோவிலை சொந்த ஊராகக் கொண்டவர்.