சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை | 'தக் லைப்' டிரைலர் : 24 மணி நேர சாதனை என்ன? | 'ரெட்ரோ' 235 கோடி வசூல்: ஷாக் ஆன ரசிகர்கள் - உண்மை என்ன? | ஆறு மாத இடைவெளியில் அழகாக யோசிக்கும் ஆதிக் | விஜய்சேதுபதி சொன்ன சைக்கிள் கதை |
தமிழில் புதிய பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக 'சலார்' படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். சிரஞ்சீவியுடன் நடித்துள்ள 'வால்டர் வீரய்யா', பாலகிருஷ்ணாவுடன் நடித்துள்ள 'வீர சிம்மா ரெட்டி' படங்கள் 2023 பொங்கலுக்கு வெளியாக உள்ளன.
தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் அடிக்கடி கிளாமர் புகைப்படங்களை வெளியிடும் ஸ்ருதி, நேற்று மேக்கப் இல்லாத சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். “பர்பெக்ட் ஆன செல்பிகள் மற்றும் பதிவுகள் நிறைந்த இந்த உலகத்தில், 'பைனல் கட்' ஆக வராத சில உங்களுக்காக இதோ…. மோசமான ஹேர் நாள், ஜுரம் மற்றும் சைனஸ் காரணமாக முகம் வீங்கிய நாள், மாத விடாய் நாட்கள் மற்றும்... இன்ன பிற… இவற்றையும் நீங்கள் ரசிப்பீர்கள் என நம்புகிறேன், விசித்திரமாக இரு…,” என்று அந்த புகைப்படங்களுக்கான காரணத்தையும் பதிவிட்டுள்ளார்.
முன்னணி நடிகர்களுடன், பிரம்மாண்டப் படங்களில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன் இப்படி வெளிப்படையான பதிவுகளையும், புகைப்படங்களையும் பதிவிட்டு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளார். இப்படி இயல்பாக இருக்கும் நடிகைகளைப் பார்ப்பதும் விசித்திரம் தான்.