எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் | உங்களை ஏமாற்ற மாட்டேன் லாலேட்டா : மோகன்லால் மகளை அறிமுகப்படுத்தும் இயக்குனர் உறுதி | சினிமாவில் ஒரு வட்டத்துக்குள் சிக்க விரும்பவில்லை: கிரேஸ் ஆண்டனி | சுரேஷ் கோபி பட சென்சார் விவகாரம் : சனிக்கிழமை படம் பார்க்கும் நீதிபதி | கவுதம் ராம் கார்த்திக் படத்தில் இணையும் பிரபலங்கள் | மீண்டும் ஒரு லெஸ்பியன் படம் | வரி உயர்வு : ஆகஸ்ட் முதல் படங்களை வெளியிடப் போவதில்லை : புதுச்சேரி விநியோகஸ்தர்கள் அறிவிப்பு | இங்கே ஹோம்லி, அங்கே கவர்ச்சி : ராஷ்மிகாவின் அடடே பாலிசி | பிளாஷ்பேக்: வசுந்தரா தாசை நிராகரித்த மணிரத்னம் |
தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படத்தில் கண்டு கொள்ளப்படவில்லை என்றாலும் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்' என இரண்டு பெரிய வெற்றிகளை அடுத்தடுத்து கொடுத்து பலரையும் தன் பக்கம் திருப்பியவர் இயக்குனர் பொன்ராம். அதற்குடுத்து அவரது இயக்கத்தில் வெளிவந்த 'சீமராஜா, எம்ஜிஆர் மகன்' ஆகிய இரண்டு படங்களும் தோல்விப் படங்களாக அமைந்தன.
அடுத்தடுத்த தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல் விஜய் சேதுபதி நடிக்கும் 'டிஎஸ்பி' படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த வாரம் டிசம்பர் 2ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. எத்தனையோ போலீஸ் கதைகளை தமிழ் சினிமா பார்த்து விட்டது. இந்த 'டிஎஸ்பி' என்ன செய்துள்ளார் என்பதை இரண்டு நாட்களில் தெரிந்து கொள்ளலாம். இந்தப் படம் வெற்றி பெற்றால்தான் தமிழ் சினிமாவில் இழந்த தனது இடத்தை பொன்ராம் மீண்டும் பிடிக்க முடியும்.
விஜய் சேதுபதிக்கும் இந்தப் படம் முக்கியமான படம்தான். '96' படத்திற்குப் பிறகு அவர் தனி கதாநாயகனாக நடித்து வெளிவந்த படங்கள் எதுவுமே அந்த அளவிற்குப் பெரிய வெற்றியையும், வரவேற்பையும் பெறவில்லை. இந்த வருடம் அவர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த படங்களில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் மட்டுமே சுமாரான வெற்றியைப் பெற்றது. வில்லனாக நடித்த 'விக்ரம்' பெரிய வெற்றியைப் பெற்றது. எனவே, இந்த 'டிஎஸ்பி'யின் வெற்றியை விஜய் சேதுபதியும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.